வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிலவரப்படி, குடிநுழைவு தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய 123 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டுடன் (2022) ஒப்பிடுகையில் அது 105 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரச்சனை தொடர்பில் சிங்கப்பூரில் பேரணி, முழக்கம் – போலீஸ் விசாரணை

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த முதலாளிகள், அவர்கள் சிங்கப்பூரில் தங்குவதற்கு செல்லுபடியாகும் குடிநுழைவு அனுமதிச்சீட்டை வைத்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கவில்லை அல்லது சரிபார்க்கத் தவறியதாக ICA கூறியது.

முதலாளிகளால் சட்டத்திற்கு புறம்பாக பணியமர்த்தப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள், பகுதிநேர வீட்டு துப்புரவு பணியாளர்கள், வீட்டுப் பணிப்பெண்கள், சமையலறை உதவியாளர்கள் அல்லது உணவு மற்றும் பானத் கடைகளில் பாத்திரங்களைக் கழுவுபவர்களாக வேலை செய்வது கண்டறியப்பட்டது.

குடிநுழைவு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது வேலைக்கு பணியமர்த்துவது கடுமையான குற்றமாகும்.

அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ICA சொன்னது.

சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்