வெளிநாட்டு பிரச்சனை தொடர்பில் சிங்கப்பூரில் பேரணி, முழக்கம் – போலீஸ் விசாரணை

spf-investigate-events-singapore
sgforpalestine/Instagram

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டு தனித்தனி நிகழ்வுகளை சிங்கப்பூர்க் காவல்துறை (SPF) விசாரித்து வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் கடந்த பிப்.2 அன்று நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளைப் பற்றியும் காவல்துறைக்கு பல புகார்கள் கிடைத்தன.

சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்

இஸ்தானாவுக்கு அணிவகுப்பு

போலீசார் விசாரித்து வரும் நிகழ்வுகளில் ஒன்று, இஸ்தானாவுக்கு 70 பேர் அணிவகுத்து சென்றுள்ளனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் ஒன்று கூடிய குழு, மதியம் 2 மணியளவில் இஸ்தானாவை நோக்கி அணிவகுத்துள்ளது.

அவர்கள் பாலஸ்தீனியர்களின் ஒற்றுமையின் அடையாளமான தர்பூசணி படங்களுடன் கூடிய குடைகளை ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சுமார் 70 கடிதங்களை பிரதமர் லீ சியென் லூங்கிடம் கொடுப்பதற்காக இஸ்தானாவிற்கு அணிவகுத்து சென்றுள்ளனர்.

இந்த கூட்டம் உரிமம் இல்லாமல் நடந்ததாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

ஆதரவு முழக்கத்துடன் நேரடி ஒளிபரப்பு

பிப். 2ம் தேதி இரவு சுமார் 7:30 மணியளவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி குறித்தும் SPF விசாரணை நடத்தி வருகிறது.

இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காணொளியில், “பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் வேண்டும்” என்று கோஷமிடுவதும் தெரியவந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு நிகழ்வுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை