சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்

Australia jobs better salary living costs
Pexel

இந்தியா, சிங்கப்பூர் உட்பட ஆசியாவில் இருந்து அதிகமான புலம்பெயர்ந்தோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குச் இடம்பெயர திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக ஆஸ்திரேலியா நீக்கிய பின்னர் வெளிநாட்டவர்கள் அதிகமானோர் இடம்பெயருவதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை

கோவிட்-19 தொற்று காலத்தின் போது, ​​ஆஸ்திரேலியா அதன் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் திறமையான புலம்பெயர்ந்தோரால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அங்கு செல்லமுடியவில்லை.

இதனை அடுத்து அது மீண்டும் பயண அனுமதி கொடுத்ததில் இருந்து, சிங்கப்பூர், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகமான மக்கள் ஊழியராக அங்கு சென்று பற்றாக்குறையை நிரப்புவதாக சொல்லப்பட்டுள்ளது.

2018 முதல் 2019 வரை நிரந்தர விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 33,611 ஆக இருந்தது. அது 2023ஆம் ஆண்டு கணக்கின்படி 41,145 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல அங்கு செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 1,718 சிங்கப்பூரர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது. இது 2019 ஆம் ஆண்டில் 1,135 ஆக இருந்தது என்று அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமாக இடம்பெயர்வு விகிதம் அதிகரித்துள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோரின் வருகையை பாதியாகக் குறைக்க விரும்புவதாக ஆஸ்திரேலியா கடந்த டிசம்பர் 11 அன்று அறிவித்தது.

இதில் சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன்கொண்ட ஊழியர்களுக்கான விசா விதிகளை அந்நாடு கடுமையாக்குகிறது.

சிங்கப்பூரை விட அங்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை இருப்பதாக இடம்பெயர்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், அங்கு குறைந்த வாழ்க்கைச் செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சிங்கப்பூரர்கள் அங்கு செல்கிறார்கள் என்றும் அது கூறியது.