வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

jail-caning-worker-sex-assaulted-maid
Roslan Rahman/AFP

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி வீடு ஒன்றில் பெயின்டிங் வேலைகளைச் செய்துகொண்டிருந்த அவர், ​​அங்கு வேலை செய்யும் வீட்டுப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது

இந்நிலையில், 35 வயதான மியா சுசன் என்ற பங்களாதேஷ் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் (பிப்ரவரி 13) அவருக்கு நான்கு பிரம்படிகளுடன் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தகாத முறையில் நடத்துக்கொண்ட மற்ற மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

புதுப்பித்தலில் நிபுணத்துவம் பெற்ற CitiWall என்ற கட்டுமான நிறுவனத்தில் மியா பணிபுரிந்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த போது 26 வயதான பணிப்பெண், அந்த வீட்டில் ஒரு வயதான மூதாட்டியை கவனித்துக்கொள்ள வேண்டி அவரின் மகனால் வேலைக்கு எடுக்கப்பட்டார்.

அங்கு மியா பெயிண்ட் வேலைக்கு வந்துள்ளார், அப்போது போதுமான பெயின்ட் இல்லாத காரணத்தால் முதலாளி பெயிண்ட் வாங்க வெளியே சென்றுள்ளார்.

இதை பயன்படுத்திக்கொண்ட மியா பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலை தொடங்கினார்.

முதலாளியின் தாய் வீட்டில் இருந்தபோதிலும், மியா அந்த பெண்ணை துன்புறுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

பணிப்பெண் அறையில் தனியாக இருப்பதைக் கண்ட அவர், தகாத முறையில் பெண்ணின் மார்பைத் தொட்டு முத்தமிட முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை முற்றிலும் பணிப்பெண் மறுத்துள்ளார், ஆனாலும் விடாமல் துரத்திய மியா கழிவறையில் துணி துவைக்கும் போது பெண்ணை மானபங்கம் செய்துள்ளார்.

அதாவது பணிப்பெண் கழிவறையில் குனிந்து இருந்தபோது, ​​மியா பின்பக்கமாக நெருங்கி, கையை பெண்ணின் கீழ் ஆடைக்குள் வைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

இதனால் பணிப்பெண்ணின் இடுப்பைச் சுற்றி சிவந்து போனதாகவும், உடல் வலி ஏற்பட்டதாகவும் மேலும் அவரது அந்தரங்க பகுதிகளில் வலி ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது