புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

Employment Pass New points system

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் திறமைகளை எல்லா நிலைகளிலும் தக்கவைக்க, வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களில் முதன்மையாக நாம் பார்க்க வேண்டியது, புதிய உயர்நிலை வேலை அனுமதி (E Pass) விண்ணப்பதாரர்களுக்கான மாத தகுதிச் சம்பளம் அதிகரித்துள்ளது.

“சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம்

உயர்நிலை வேலை அனுமதி உடைய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத தகுதிச் சம்பளம் தற்போது உள்ள $5,000 இல் இருந்து $5,600 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பள உயர்வு நடைமுறை 2025 ஆம் ஆண்டு ஜன. 1, முதல் நடப்புக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 2025ஆம் ஆண்டு ஜன.1 முதல் புதிதாக விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

E பாஸ் அனுமதியை புதுப்பிப்பவர்களுக்கும் 2026ஆம் ஆண்டு ஜன.1 முதல் அது நடப்புக்கு வரும்.

நிதிச் சேவை துறைகளில் பணிபுரிபவர்களின் மாத சம்பளம் $5,500 இல் இருந்து $6,200 ஆக உயரவுள்ளது.

“EP வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் வயதுக்கு ஏற்ப படிப்படியாக உயரும்” என்று மனிதவள அமைச்சகத்தின் (MOM) பட்ஜெட் விவாதத்தின் போது, ​​இன்று மார்ச் 4 அன்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?