இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

VTL அல்லாத விமான சேவைகள் மூலம், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கு எல்லை நடவடிக்கைகளை அரசாங்கம் எளிதாக்கும் என்று சுகாதார அமைச்சகம் நேற்று (டிசம்பர் 31) அறிவித்தது.

சிங்கப்பூருக்குள் நுழையும் வகை II, III மற்றும் IV நாடுகளைச் சேர்ந்த VTL அல்லாத பயணிகள் அனைவரும் வருகையின்போது (on-arrival tests) கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

பிரதமர் லீயின் புத்தாண்டு பரிசு: அதிக தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் நுழைய ஏற்பாடு!

இந்தியா

இந்த வகைப்பட்டியலில் இந்தியா தற்போது வகை II இல் உள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்தும் வரும் பயணிகளும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

இருப்பினும், அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (SHN) நிறைவேற்ற வேண்டும். பயணிகள் தங்கள் இடங்களிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

இது வரும் வரும் ஜன. 8, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து VTL அல்லாத பயணிகளுக்கும் வருகையின்போது (on-arrival tests) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பயணிகள் தங்கள் SHN தனிமை கால முடிவில் PCR சோதனைக்கு உட்பட வேண்டும், மேலும் அதில் நெகடிவ் முடிவு இருந்தால் மட்டுமே வெளியே தனிமை காலம் முடியும்.

VTL விமானங்களில் பயணம் செய்பவர்கள் உட்பட மற்ற அனைத்து பயணிகளும் சாங்கி விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் இந்த 2022 ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் – வாங்க பார்க்கலாம்!