பிரதமர் லீயின் புத்தாண்டு பரிசு: அதிக தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் நுழைய ஏற்பாடு!

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

பொருளாதாரம் சீராக மீண்டு, உலகின் மற்ற பகுதிகளுடன் சிங்கப்பூர் மீண்டும் இணையும் மாற்றத்திற்கான ஆண்டாக இந்த 2022ஆம் ஆண்டு இருக்கும் என்று பிரதமர் லீ ஹிசியன் லூங் தனது புத்தாண்டு செய்தியில் தெரிவித்தார்.

அதே போல, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3 முதல் 5 சதவீதம் வரை வளரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இந்த 2022 ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் – வாங்க பார்க்கலாம்!

ஓமைக்ரான் பரவல் சூழலை கருத்தில்கொண்டு, எல்லை தாண்டிய பயணம் மீண்டும் பாதுகாப்பாக தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் நுழைய ஏற்பாடு செய்யப்படும் என்றும் திரு லீ கூறினார்.

மேலும், “நீண்ட கால இலக்குகளை அடைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த திட்டம் நிறுவனங்கள் மறுசீரமைக்கவும் மற்றும் ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் உதவும்.”

சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக வேலை…புதுக்கோட்டை வந்த ஊழியர் மாயம் – தேடிவரும் போலீஸ்