ரயில்களில் கீழ்த்தரமாக நடக்கும் நபர்கள்… பெண் பயணிகள் தான் அவர்கள் டார்கெட் – போட்டோ வெளியிட்டு எச்சரிக்கை

MRT men secretly take photos women
Stomp

சிங்கப்பூர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இது போன்ற கீழ்த்தரமான நபர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கடந்த வாரம் ரயிலில் பயணித்த பெண் பயணிகளை மொபைல் கேமராவில் புகைப்படம் எடுத்ததாக இரண்டு ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண் பயணிகளை போட்டோ எடுக்கும்போது சக பயணி ஒருவர் அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை லீ என்பவர் அனுப்பியதாக Stomp வெளியிட்டுள்ளது.

தனது சுய மகிழ்ச்சிக்காக பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்தவர்கள் குறித்து MRT பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியதாக லீ கூறினார்.

“அவர்களின் ஃபோன் கேலரியில் இருந்த புகைப்படத்தை என்னால் போட்டோ எடுக்க முடிந்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் லீக்கு கோவிட்-19 தொற்று உறுதி – இதுவே முதல்முறை

கடந்த மே 17 அன்று, சிட்டி ஹால் MRT ரயில் நிலையத்தில் பெண்ணின் upskirt வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து அன்று மாலை 6.20 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் CCTV காட்சிகளின் உதவியுடன், அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து அதே நாளில் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், 22 வயதான அந்த நபர் இதே போன்ற பிற வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Seletar Expressway சாலை விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனில்லாமல் மரணம்