வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work pass விதிகள் – தவறிழைக்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை

வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work pass விதிகள் - தவறிழைக்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை
(Photo: NYTimes)

Singapore Work pass JOBS: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை முறையான Work pass அனுமதியின்றி வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட Work pass அனுமதிகளை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அழைத்து வந்த குற்றச்சாட்டில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரயில்களில் கீழ்த்தரமாக நடக்கும் நபர்கள்… பெண் பயணிகள் தான் அவர்கள் டார்கெட் – போட்டோ வெளியிட்டு எச்சரிக்கை

முறையான Work pass அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் என்ன தண்டனை:

முதலாளிகளுக்கு…

முதலாளிகளுக்கு குறைந்தது S$5,000 அபராதம் விதிக்கப்படலாம்.

ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கூடுதலாக அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

அதன் பின்னர் தவறிழைக்கும் முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு எடுக்கமுடியாது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு….

சிங்கப்பூரில் முறையான Work pass அனுமதி இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இரண்டு ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம்.

கூடுதலாக அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

இவ்வாறான குற்றம் நிரூபணமானால் Work pass அனுமதியில் சிங்கப்பூருக்கு ஒரு காலத்திலும் பணிபுரிய அனுமதி வழங்கப்படாது.

பிரதமர் லீக்கு கோவிட்-19 தொற்று உறுதி – இதுவே முதல்முறை