வெளிநாட்டு ஊழியர்கள்… Work pass வேலை குளறுபடி – 27 பேர் அதிரடி கைது

work passes foreign workers jobs 27 suspects arrested
MOM

Singapore Work pass: வெளிநாட்டு ஊழியர்களின் வேலை தொடர்பாக நடந்த குளறுபடியில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பெறப்பட்ட Work pass அனுமதிகளை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அழைத்து வந்த மோசடியை மனிதவள அமைச்சகம் (MOM) முறியடித்துள்ளது.

அதிரடி சோதனை

நாடு முழுவதும் நடந்த 2 நாள் அதிரடி சோதனை நடவடிக்கை கடந்த புதன்கிழமை (மே 17) முடிவடைந்தது. இதில் அந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய வம்சாவளி சிங்கப்பூரரை காணவில்லை – எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து விழுந்ததாக தகவல்

19 இடங்ககளில் சோதனை

சந்தேக நபர்களுக்கு சொந்தமான உணவுக் கடைகள், வீடுகள் மற்றும் அலுவலகம் உட்பட 19 இடங்ககளில் MOM அதிரடி சோதனை நடத்தியது.

290 வெளிநாட்டு ஊழியர்கள்

அதில் சுமார் 290 வெளிநாட்டு ஊழியர்களை மோசடியான வழிகளில் சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே போல வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த சிங்கப்பூரர்களுக்கு CPF தொகையை மோசடியாக உயர்த்தியதும் இதில் அடங்கும் என்று MOM நேற்று தெரிவித்தது.

பறிமுதல்

அமலாக்க நடவடிக்கையின் போது பணம் செலுத்திய பதிவுகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற 80 டிஜிட்டல் சாதனங்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் விசாரணைகள் தொடர்ந்தும் நடந்து வருவதாகவும் MOM கூறியுள்ளது.