சிங்கப்பூரில் புகழ்பெற்ற ஆசிரியர் ஜாக் மா மிகப்பெரிய பங்களா கட்ட திட்டம்.?

Jack Ma might be building massive bungalow in Singapore

பில்லியனர் – ஆசிரியர் புகழ் பெற்ற ஜாக் மா (Jack ma) சிங்கப்பூரில் மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிஸ்னஸ் டைம்ஸ் (Bussiness times) பத்திரிகையின் தகவலின் படி, விக்டோரியா பார்க் க்ளோஸ் பகுதியில் (Victoria park close) அலிபாபா குழுமத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஜாக் மா (jack ma) இரண்டு மாடி பங்களா கட்டப்போவதாக வதந்திகள் பரவி வருவதாக கூறியுள்ளது.

இருபது ஆண்டுகளாக அந்த இடத்தில் பழமையான பங்களா இருந்தததாகவும், அங்கு 2010 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவ தம்பதியினர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில் இந்த பங்களா S$40 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

விக்டோரியா பார்க் க்ளோஸில் (victoria park close) உள்ள வீடுகள் சுமார் 20 மில்லியனுக்கு விலைபோகும் என்று கூறப்படுகிறது.

பிஸினஸ் டைம்ஸ் உறுதியாக செய்தியை வௌியிடாதத்திற்கு காரணம், இந்த பங்களாவை வாங்குபவரின் பெயர் USB டிரஸ்ட்டீஸ் என்று பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த அணுகுமுறை வீட்டின் உரிமையாளரின் அடையாளத்தை மறைத்து வைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக கூட இருக்கலாம்.

2016 ஆம் ஆண்டில் அங்குள்ள வீடுகளில் ஒன்று சுமார் 19 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இதற்கான காரணம் இந்த வீடு
கீழ் நோக்கி சரிவில் இருந்ததாள் மலிவான விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விக்டோரியா பார்க் க்ளோஸ் (Victoria park close) என்பது நல்ல தரமான பங்களா கட்டுவதற்கு சிறந்த இடமாக இருந்து வருகிறது.