சீனா, பெய்ஜிங்கின் மிகப் பிரம்மாண்டமான புதிய நட்சத்திர மீன் வடிவ சர்வதேச விமான நிலையம் சுமார் S$ 15.1 பில்லியன் மதிப்பில் திறக்கப்பட்டது.
அக்டோபர் 1 ஆம் தேதி சீனக் குடியரசின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு செப்டம்பர் 25 புதன்கிழமை அன்று ஜனாதிபதி Xi Jinping அவர்களால் திறக்கப்பட்டது.
இந்த பிரம்மிப்பூட்டும் நட்சத்திர வடிவ விமானநிலையம் 700,000 சதுர மீட்டர் தொலைவில், தலைநகரில் இருந்து தெற்கில் அமைந்துள்ளது.
புதிய விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
சீனா Southern Airbus A380 விமானம் குவாங்சோவுக்கு முதலில் பறந்தது குறிப்பிடத்தக்கது.
இது நான்கு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது, மேலும் 2025 க்குள் ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையமாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் 100 மில்லியன் வரை எட்டும் திறன் இந்த விமான நிலையத்திற்கு உள்ளது.