மோசமான கிளியா இருக்கும் போல! – கிளிக்கு பயந்து HDB குடியிருப்பை விற்ற பெண்

parrot-noisy-bedok
சிங்கப்பூரில் சிலர் பல்வேறு காரணங்களுக்காக HDB குடியிருப்பினை விற்பனை செய்கிறார்கள்.ஆனால்,ஒரு சிலரின் காரணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
பெடோக்கில் உள்ள 45 வயது பெண்,அவரது பக்கத்து வீட்டு அதிக சத்தம் எழுப்பியதால் அவரது HDB பிளாட்டை விற்றார். பிளாக் 620 பெடோக் ரிசர்வாயர் சாலையில் வசிக்கும் வூ குடும்பம் ,அதை தனது பக்கத்து வீட்டு கிளியுடன் வைத்திருந்தார்.
இந்த கிளியானது நள்ளிரவிலும் அதிகாலையிலும் சத்தம் எழுப்புவதை வாடிக்கையாய் கொண்டது.கிளியை வளர்க்கும் குடும்பம் இரவு 7 மணி முதல் விசில் அடிக்கத் தொடங்கிய உடன் அதற்குப் பதிலாக கிளி கத்தும் என்று அண்டை வீட்டில் வசிப்பவர் கூறினார்.
இந்த நிலை இரவு 10 மணி வரை நீடிக்கும் என்றும் வார இறுதி நாட்களில்,நிலைமை மோசமடைந்து அனைவரின் தூக்கத்தையும் சீர்குலைத்து விடும் என்றும் கூறினார்.

ஆரம்பகட்டத்தில் நல்ல அண்டை வீட்டாராக இருக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருந்ததாகவும் ஆனால் அந்த அமைதியை குடும்பத்தினர் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கிளியின் சத்தத்திலிருந்து விடுபட குடியிருப்பாளர்கள் வெவ்வேறு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.26 வயதான குடியிருப்பாளர் ஒருவர் தூங்குவதற்கு காதில் செருகிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இருப்பினும் கிளியின் சத்தம் மேலும் கேட்டுள்ளது.மற்றொரு 50 வயதான குடியிருப்பாளர் கிளியின் சத்தம் அவரை அதிகம் பாதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கிளியின் அதிக சத்தம் குறித்து பக்கத்து வீட்டுக்காரரிடம் வூ புகார் செய்துள்ளார்.கூண்டினை வீட்டிற்குள் நகர்த்திய உரிமையாளர் பறவையுடன் வெகுநேரம் குடும்பம் பழகியது.இதனால் பிரச்சினை தீவிரம் அடைந்தது.இது வூவின் நிலைமையை மோசமாக்கியது.
வீட்டிற்கு செல்ல வெறுப்பாக இருப்பதாகவும் இரவு முழுவதும் ஓய்வெடுக்க முடியாமல் குழந்தையை பள்ளிக்கு கிளப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண் வீட்டை விற்க முடிவு செய்தார்.
இறுதியில் வெற்றிகரமாக குடியிருப்பை வாங்குபவரை கண்டுபிடித்தார்.ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் இந்த சத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்று அவர் கூறினார்.