சிங்கப்பூரில் இரு நகரங்களுக்கு இடையில் புதிய சாலை திறக்கப்பட உள்ளது..!

A photo taken on Nov 25, 2018, New road between Pasir Ris and Punggol towns to open on Nov 17 (Photo : Straits Times)

சிங்கப்பூரில் இரு நகரங்களுக்கு இடையில் புதிய சாலை திறக்கப்பட உள்ள காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பசிர் ரிஸ் (Pasir ris) மற்றும் புங்க்கோல் (Punggol) நகரங்களுக்கு இடையில் புதிய சாலை திறக்கப்பட உள்ளது.

பசீர் ரிஸ் மற்றும் புங்க்கோலில் வசிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி, இன்னும் இரண்டு வாரங்களில் அந்த இரு நகரங்களுக்கிடையில் போக்குவரத்திற்க்கு புதிய சாலை திறக்கப்பட உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பயணங்களை இனி எளிதாக அமைத்துக்கொள்ள முடியும்.

இந்த சாலை வரும் நவம்பர் 17 ஆம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட உள்ளது, இந்த சாலையானது இரு நகரங்களுக்கிடையில் கூடுதல் பாதையை வாகன ஓட்டிகளுக்கு வழங்கும், மேலும் டம்பைன்ஸ் அதிவேக நெடுஞ்சாலையில் (TPE) போக்குவரத்தை எளிதாக்க உதவும், என்று தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) வியாழக்கிழமை (அக் .31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கல்லாங்-பயா லெபார் அதிவேக நெடுஞ்சாலைக்கும் (KPE) மற்றும் TPE-க்கும் இடையிலான பரிமாற்ற விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.