சிங்கப்பூரில் Tampines North பேருந்து பரிமாற்றம் Tampines Street 62 இல் அமைந்துள்ளது.நவம்பர் 27, 2022 அன்று திறப்புவிழா நடைபெற்ற நிலையில் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அறிவித்தது.
புதிய அம்சங்களுடன் திறக்கப்பட்டுள்ள பரிமாற்றத்தில் அனைத்து நுழைவாயில்களிலும் தடையற்ற அணுகலைப் பெறலாம்.சக்கர நாற்காலியுடன் கூடிய கழிப்பறைகள்,உடைமாற்றும் அறை,குழந்தை பராமரிப்பு அறை,டச்லெஸ் சென்சார்கள் மூலம் செயல்படும் கதவுகள் மற்றும் ஆட்டோ ஸ்லைடிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
அமைதியான இடத்தை விரும்பும் பயணிகளுக்காக பயணிகள் பராமரிப்பு அறையும் உள்ளது.மேலும்,பணியாளர்களுக்கு என பிரத்யேக கழிப்பறைகள், துப்புரவு பணியாளர் அறை மற்றும் பணியாளர் ஓய்வறை ஆகியவை அடங்கும்.
ஏற்கனவே இருந்த பேருந்து சேவைகள் புதிதாக திறக்கப்பட்ட பரிமாற்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை முதல் பேருந்து சேவைகள் 18 மற்றும் 129 இனி Tampines North பேருந்து பரிமாற்றத்திற்கு மாற்றப்படும்.பேருந்துகளின் நகர்வைக் கண்டறிய, பேருந்துப் பரிமாற்றம் தலைகீழ் எச்சரிக்கை அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.