சிங்கப்பூரில் ரயில், பேருந்து உள்ளிட்டப் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கி வரும் ‘SMRT’ நிறுவனம் இன்று (ஏப்ரல் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “Strides டாக்ஸி மற்றும் Premier டாக்ஸி நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த புதிய டாக்ஸி பெயர் Strides Premier ஆகும். இந்த நிறுவனம், வரும் மே மாதம் 1- ஆம் தேதி முதல் டாக்ஸி சேவையை வழங்கவுள்ளது.
டாக்ஸி நிறுவனங்கள் இணைப்பு மூலம் சிங்கப்பூரில் இரண்டாவது மிகப்பெரிய டாக்ஸி நிறுவனமாக உள்ளது Strides Premier நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதம் நிலவரப்படி, இந்த டாக்ஸி நிறுவனம், 2,500 டாக்ஸிகளைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் அதிக டாக்ஸிகளைக் கொண்ட நிறுவனமாக ‘Strides Premier’ நிறுவனம் உள்ள நிலையில், 8,700 டாக்ஸிகளை அந்நிறுவனம் வைத்துள்ளது. Trans-Cab நிறுவனம், 2,170 டாக்ஸிகளுடன் சிங்கப்பூரில் மூன்றாவது டாக்ஸி நிறுவனமாக உள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகை….செய்வதறியாது தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!
இந்த இணைப்பில் Strides ஆட்டோமோட்டிவ் சர்வீசஸ் மற்றும் Premier ஆட்டோமோட்டிவ் சர்வீசஸ் ஆகியவையும் அடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.