அங்கே எல்லாமே ஈஸி ஆயிருச்சு..! 15 ஆயிரம் இந்தியர்களுக்கு குடியுரிமை: பிலிப்பைன்ஸ்சை தட்டித்தூக்கப்போகும் இந்தியா!

கனடாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கனேடிய தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக 3 விதமான தேர்வுகள் நடத்திய பின்பே, கனேடிய நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் பலரும் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதுகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகிறார்கள்.

இதற்காக முதலில், PR எனப்படும், நிரந்தர குடியுரிமை பெற வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய 15 ஆயிரம் இந்தியர்கள் கனேடிய குடியுரிமை பெற்று இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் ஆகும்.

கனேடிய குடியுரிமை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர் 15,600 பேருக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

கனடா போலவே பல ஆண்டுகளாக, சிங்கப்பூர் PR பெறுவது எளிதாக இருந்தது. இருப்பினும், சிங்கப்பூர் அரசாங்கம் விரக்தியடைந்த சிங்கப்பூர் பூர்வீகவாசிகளுக்கு செவிசாய்க்கத் தொடங்கியது. வெளிநாட்டினர் தங்கள் வேலையை எடுத்துக்கொள்வதாகவும், ரியல் எஸ்டேட் முதல் கார்கள் வாங்குவதற்கான உரிமைச் சான்றிதழ்கள் வரை எல்லாவற்றின் விலையையும் உயர்த்துவதாகவும் உணர்கிறார்கள்.

இதன் விளைவாக, சட்டப்பூர்வ குடியிருப்பாளராக சிங்கப்பூருக்குச் செல்வது கடினமாகிவிட்டது. இருப்பினும், நீங்கள் வணிக யோசனை அல்லது முதலீடு செய்ய மில்லியன் கணக்கான டாலர்கள் இருந்தால், எளிதாக சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற முடியும்.