7- Eleven சிங்கப்பூர் தன்னுடைய 400 வது ஸ்டோரை திறந்துள்ளது!

7-Eleven Singapore has opened its 400th store at the newly revamped Funan mall.

சிங்கப்பூரில் அனைத்து பகுதிகளிலும் அமைந்திருக்கும் 7- Eleven ஸ்டோர் தற்போது தன்னுடைய 400 ஆவது ஸ்டோரை புதிதாக திறந்துள்ளது.

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இந்த 7- Eleven சிங்கப்பூரின் 400 ஆவது ஸ்டோர் Funan மாலில் திறக்கப்பட்டுள்ளது.

36 வருடம் தொடர்ந்து சிங்கப்பூர் மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த சி-ஸ்டோர் முதன் முதலில் Upper Changi சாலையில் 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வணிக உலகில் தனக்கென ஒரு வளர்ச்சியை உறுதி செய்து தனித்துவமான முறையில் இயங்கி வருகிறது.

தரமாக, நியாமான மதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு மலிவான முறையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதே எங்களின் நோக்கம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த சில வருடங்களாக 7 – Eleven தன்னுடைய கிளையை நிறுவி வருவதில் முனைப்பு காட்டி வருகிறது.