சிங்கப்பூருக்கு சிக்கனை அனுப்பி வைக்கிறதா அமெரிக்கா? – தாய்லாந்திலிருந்து செய்யப்படும் கோழி இறக்குமதி 10 மடங்கு அதிகரிப்பு

KFC outlet in Punggol has licence suspended
chicken

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து மலேசியா கோழி ஏற்றுமதி தடையை அமல்படுத்தியது. இதனால் மலேசியாவிடமிருந்து கோழிகளை இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்பட்டன.

மலேசியாவின் ஏற்றுமதி தடையினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும். சிங்கப்பூரின் கோழி விநியோகங்கள் பெருமளவில் பாதிப்படைந்து சிக்கன் உணவு வகைகளின் விலைகள் உயர்ந்தன.

விலை உயர்வு காரணமாக சிங்கப்பூரின் சிக்கன் பிரியர்கள் வேறு இறைச்சிக்கு மாறத் தொடங்கினர். தற்பொழுது ஆஸ்திரேலியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட கோழிகளும் அமெரிக்கா பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து உறைந்த கோழிகளும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பி வைக்கப்படும் என்று நீடித்த மற்றும் நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் Desmand Tan கூறினார்.

கோழி ஏற்றுமதிக்கு தற்காலிக தடையை கடந்த புதன்கிழமை அன்று மலேசியா அறிவித்த போதிலும் சிங்கப்பூரில் கோழி வினியோகம் சீராக இருந்ததாக குறிப்பிட்டார். சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் உணவு விநியோக நிறுவனம் ஒன்று தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யும் கோழிகளின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக Tan தெரிவித்தார் .

நேற்று காலை சில அங்காடிகளுக்கு சென்றதாகவும் அங்கு போதுமான அளவில் கோழிகள் இருந்ததாகவும் கூறிய அவர் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி தடையினால் அவ்வப்போது சிங்கப்பூர் பாதிப்படையும் என்று தெரிவித்தார். என்ன நடந்தாலும் சிக்கன் பிரியர்களுக்கு சிக்கன் மீதான ஈடுபாடு குறையாது என்பதில் சந்தேகமில்லை.