சிங்கப்பூரில் கோழிகளுக்கான தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படுமா ! – இந்த நாட்டில் இருந்து இறக்குமதியா ?

broiler chicken

இந்தோனேஷியாவின் ஒரு மாத கோழி உற்பத்தியான 240 மில்லியன் கோழிகளில் சிலவற்றை சிங்கப்பூர் எடுக்கவுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் அதிகாரியான Susiwijono Moegiarso, இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான உரையாடல்களைத் தொடர்ந்து, ஜூன் 2022க்குள் கோழிகளின் ஏற்றுமதி தொடங்கும் என்று கூறியுள்ளார். சிங்கப்பூர் உணவு நிறுவனமான (SFA), இந்தோனேசிய அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் கோழி இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
தற்போது கோழி உற்பத்தியில் இந்தோனேசியா மிகையாக உள்ளது. இதுவரை, இந்தோனேசியா சிங்கப்பூருக்கு கோழிகளை விற்றதில்லை என்றாலும் இப்போது சிங்கப்பூரின் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் இது உள்ளது. வாரத்திற்கு உற்பத்தி செய்யப்படும் 55 முதல் 60 மில்லியன் கோழிகளில், உள்நாட்டு தேவைகள் போக இந்தோனேசியாவிடம் இன்னும் 15 முதல் 20 % மிகையாக உள்ளது என்று இந்தோனேசிய கோழி வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் அச்மத் தவாமி தெரிவித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் மாதத்திற்கு 3.6 முதல் 4 மில்லியன் கோழிகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 2022ல், மலேசியா தனது கோழி ஏற்றுமதியை கட்டுப்படுத்திய பிறகு கோழிக்கான மாற்று விநியோகத்தினை சிங்கப்பூர் தேடி வருகிறது. ஜூன் பாதியில் , மலேசியா சில பிரீமியம் கோழிகள் மீதான அதன் ஏற்றுமதி தடையை ஓரளவு நீக்கியது, ஆனாலும் வணிக பிராய்லர் கோழி மற்றும் பிற வகை கோழிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இன்னும் நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.