சிங்கப்பூர் விசா செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க முடியுமா? விசா சந்தேகங்களின் முழு விவரம்!

Photo: Forbes

சிங்கப்பூர் விசா செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க முடியுமா?

விசா செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கவோ அல்லது விசா வகையை மாற்றவோ கண்டிப்பாக முடியாது. உங்கள் தற்போதைய விசா காலாவதியாகும் போது அல்லது மீண்டும் பயன்படுத்தப்படும் என்ற தேவை வரும் போது நீங்கள் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் . இருப்பினும், ஒவ்வொரு விசா விண்ணப்பமும் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நீண்டகால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

வழங்கப்பட்ட விசாவின் காலம் உட்பட, விசாவிற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது. அது ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு, விசா ஒப்புதலுக்குப் பிறகு உண்மையான செல்லுபடியாகும் தன்மை குறித்து அறிவிக்கப்படும். விண்ணப்பத்தின் போது, ICA இன் பரிசீலனைக்காக “Remarks” என்ற இடத்தில் நீண்ட செல்லுபடியாகும் விசா தேவைப்படுவதற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிட விரும்பலாம். தேவைப்பட்டால், நீங்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விசா செல்லுபடியாகும் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

விசா செல்லுபடியாகும் தன்மை குறித்து விசா மீதே அச்சிடப்பட்டுள்ளது. இந்த இ-சேவையைப் பயன்படுத்தி உங்கள் இ-விசாவை மீட்டெடுக்கலாம். இ-விசாவைப் பெற, “Enquire Application Status” என்பதைக் கிளிக் செய்து, உங்கள் விசா குறிப்பு எண் மற்றும் பயண ஆவண எண்ணை பதிவிட வேண்டும். உங்களிடம் விசா விண்ணப்பக் குறிப்பு எண் இல்லையென்றால் , விசா விண்ணப்பக் குறிப்பு எண்ணை மீட்டெடுப்பதற்கு ICA_SAVE_Helpdesk@ica.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம் . உங்கள் மின்னஞ்சலில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண்ணை தயவுசெய்து குறிப்பிட வேண்டும்.