மெல்ல மீண்டு வரும் கேட்டரிங் தொழில்!

File Photo

 

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அலல்து கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

மற்றொருபுறம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்கின்றனர். மேலும், கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவும் அதிகரித்துள்ளது. அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக, உணவகங்கள், பானக் கடைகள், பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்டவைத் திறக்கப்பட்டுள்ளன.

 

இருப்பினும் அரசு அமல்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளால் வணிகர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.  குறிப்பாக, உணவகங்களின் உரிமையாளர்கள், கேட்டரிங் தொழிலை நடத்தி வருபவர்கள் முதல் உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வரை பொருளாதார ரீதியிலாக கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின.

 

தற்போது, உணவகங்களில் ஐந்து பேர் வரை குழுவாக அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  உணவக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழா, குடும்ப நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதால், எங்களுக்கு உணவு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் உணவு ஆர்டர்கள் குறைந்த ஆளவே வருகின்றன. பெரும்பாலானோர் சிறிய உணவகம் மற்றும் பானக் கடைகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்” என்றார்.

 

கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, உணவு விடுதிகள் தங்கள் வருவாயில் 30 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை இரட்டை இலக்க சரிவைக் கண்டன.  மறுபுறம், பிற உணவு மற்றும் பானக் கடைகளின் தொழில்கள் பிப்ரவரி முதல் விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு சாதகமான வளர்ச்சியைக் கண்டன.

 

அதேபோல் சிங்கப்பூரில் உள்ள கேட்டரிங் தொழிலை நடத்தி வருபவர்கள் கூறுகையில், “கொரோனா காரணமாக எங்களுக்கு வர வேண்டிய உணவு ஆர்டர்கள் நின்று போனது. இருப்பினும், தற்போது நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் உணவு ஆர்டர்கள் வருகின்றன. மெல்ல மெல்ல எங்கள் தொழில் மீண்டு வருகிறது” என்று கூறினர்.

 

அதேபோல் சிங்கப்பூரில் உள்ள கேட்டரிங் தொழிலை நடத்தி வருபவர்கள் கூறுகையில், “கொரோனா காரணமாக எங்களுக்கு வர வேண்டிய உணவு ஆர்டர்கள் நின்று போனது. இருப்பினும், தற்போது நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் உணவு ஆர்டர்கள் வருகின்றன. அதிக பேர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதித்தால் எங்களுக்கு கூடுதல் உணவு ஆர்டர்கள் கிடைக்கும். மெல்ல மெல்ல எங்கள் தொழில் மீண்டு வருகிறது” என்று கூறினர்.

 

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வணிகர்கள் ஆன்லைன் வணிகத்துக்கு மாறியுள்ள நிலையுள்ள நிலையில், அந்த வரிசையில் உணவகங்களும், கேட்டரிங்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் நமக்கு ஒருபுறம் தீமையைச் செய்தாலும், மறுபுறம் பல்வேறு தரப்பினருக்கும் தொழில் ரீதியான மாற்றங்களைச் செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 

உணவகங்கள், கேட்டரிங் தொழில்கள் மீண்டெழுவதன் மூலம் அதன் சார்ந்த சமையல் கலைஞர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கையும் பிரகாசிக்கும். மேலும், இந்த தொழிலில் வேலை வாய்ப்புகளும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.