கோழிகளின் மீதான தடை நீக்கம், மீண்டும் ருசிக்க வலம் வரும் கேம்பங்க் மற்றும் பிலாக் சிக்கன் வகைகள்

chicken

KAMPUNG CHICKEN என்றழைக்கப்படும் நாட்டுக்கோழி மற்றும் BLACK CHICKEN என்றழைக்கப்படும் கருப்பு கோழி மீதான தடையை சிங்கப்பூர் மீது நீக்கியுள்ளது மலேசியா.
இதனை சிங்கப்பூரில் உள்ள சான்றளிக்கப்பட்ட கோழி விநியோக நிறுவனமான Kee Song, கோழிகளின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு வகை கோழிகளும் ஜூன் 14 முதல் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அவர்களின் TikTok பதிவின் படி, இந்த கோழி வகைகள் ஜூன் 15, 2022 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த TIKTOK பதிவில்
“காத்திருப்பு முடிந்தது! நாளை முதல் புதிய சிக்கன் சாப்பிடுகிறோம்! “
என்றும் பதிவிட பட்டு இருந்தது

சிங்கப்பூருக்கு விதித்த கோழி ஏற்றுமதி தடையில் உயிருள்ள கோழி மட்டுமல்லம்மால், உயிரற்ற கோழி , குளிர்ந்த மற்றும் உறைந்த கோழி இறைச்சியும் அடங்கும் என்வதுவும் இந்த கோழிக்கறி தடை ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடை அமலுக்கு வந்த போது nuggets, patties மற்றும் sausages போன்ற கோழி சமந்தமான உணவு பொருட்களும் அடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.