எதிர்நோக்கும் சிங்கப்பூர் – இந்தோனேசியா கோழிகளை ஏற்றுமதி செய்யுமா?

chicken from indonesia

ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடையை அறிவித்தது.இதனால் மலேசியாவிடமிருந்து அதிகளவில் கோழியை இறக்குமதி செய்யும் சிங்கப்பூரில் கோழி விநியோகம் பாதிப்படைந்தது.தற்பொழுது சிங்கப்பூர் உணவு நிறுவனம் இந்தோனேசியாவில் இருந்து கோழியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“கோழி இறக்குமதிக்கு சாத்தியமான ஆதாரமாக இந்தோனேசியாவை அங்கீகரிக்க முடியுமா”, என்பதை தீர்மானிக்க இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக SFA மேற்கோள் காட்டியுள்ளது.

மாதந்தோறும் இந்தோனேசியாவிலிருந்து உப்பு தடவப்பட்ட 50,000 உப்பு முட்டைகளை சிங்கபூருக்கு ஏற்றுமதி செய்கிறது.ஆனால் இதுவரை சிங்கப்பூருக்கு கோழிகளை ஏற்றுமதி செய்ததில்லை.தற்போது இந்தோனேசியாவில் உள்ள SFA குழு மத்திய மற்றும் மேற்கு ஜாவா பிராந்தியங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் ,இறைச்சி கூடங்கள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து வருகிறது.

“சிங்கப்பூருக்கு உறைந்த கோழிகளை ஏற்றுமதி செய்வது இந்தோனேசிய நிறுவனங்களுக்கு சாத்தியமான ஒன்றாகும்.ஏனெனில் உயிருள்ள கோழிகளை ஏற்றுமதி செய்வதை காட்டிலும் ஆபத்து குறைவு” என்று இந்தோனேசிய கோழி வளர்ப்பாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கம்பங் கோழிகள் மற்றும் உயிருள்ள கருப்புக் கோழிகளுக்கு மலேசியாவின் தடை நீக்கப்பட்டதாக ஜூன் 14 அன்று அறிவித்தது.