133 பேருடன் பறந்த “சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்” விமானம் விபத்து – பயணிகளின் நிலை என்ன?

சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகம் இன்று (மார்ச் 21) செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விமானம் சுமார் 133 பேருடன் புறப்பட்டு சென்றதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!

போயிங் 737 ரக  MU5735 விமானம், தெற்கு சீனாவின் Guangxi பகுதியில் விபத்துக்குள்ளானதாக CGTN கூறியுள்ளது.

அந்த விமானம் Kunming நகரிலிருந்து புறப்பட்டு Guangzhou நகருக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்கு மலையில் ஏற்பட்ட தீ தான் காரணம் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உடனடி தகவல் ஏதும் தெரியவில்லை.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!