சிங்கப்பூரில் அலுவலகத்தைத் திறந்த ‘Cigniti Technologies’ நிறுவனம்!

Photo: Google Maps

 

இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சிக்னிட்டி டெக்னாலஜிஸ் (Cigniti Technologies Ltd) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை சிக்னிட்டி நிறுவனம் திறந்துள்ளது. அங்கும் பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் தனது நிறுவனத்தின் முதல் அலுவலகத்தை சிக்னிட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திறந்துள்ளது.

 

இது குறித்து சிக்னிட்டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் சக்கிலம் (Srikanth Chakkilam, Chief Executive Officer of Cigniti) கூறுகையில், “ஆசியா- பசுபிக் பகுதியில் எங்கள் நிறுவனத்தை விரிவுப்படுத்தப் பார்த்த போது, சிங்கப்பூர் ஒரு உலகளாவிய வணிக மையமாக இருப்பதால், சிறந்த இணைப்பு, தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆதரவான வணிக சுற்றுச்சூழல் அரசாங்கத்துடன் கூடியது. நாங்கள் ஏற்கனவே சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சிங்கப்பூரில் உள்ள எங்கள் புதிய அலுவலகம், பிராந்தியத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகவும் சுறுசுறுப்பாகவும், பதிலளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், அவர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும்” எனக் கூறினார்.