கிரிப்டோகரன்சி சொத்துக்களை பரிசீலிக்கும் முதல் நிதி நிறுவனமாகும், சிங்கப்பூரின் தனியார் சந்தை பரிமாற்றமான ADDX

crypto currency ADDP

சிங்கப்பூரின் ஒழுங்குமுறை விதிப்பு கீழ், அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களாகத் தகுதிபெற தனிநபர்கள் 3 அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைச் சந்திக்க வேண்டும்.

1. கடந்த 12 மாதங்களில் S$300,000க்கு மேல் வருமானம் ஈட்டியிருக்க வேண்டும்
2. S$1 மில்லியனுக்கும் அதிகமான நிகர நிதிச் சொத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்
3. S$2 மில்லியனுக்கும் அதிகமான நிகர தனிப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும்.

 

தற்போது வருமானம் அல்லது நிதிச் சொத்துகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், தனிப்பட்ட சொத்துக்களாக அவை அங்கீகரிக்கப்படலாம்.

 

ADDXல் அங்கீகரிக்கப்பட்ட 3 கிரிப்டோ நாணயங்களான Bitcoin, Ether மற்றும் USD Coinகளில், Bitcoin மற்றும் Ether பங்குகளுக்கு 50%ம், USD Coinகளின் பங்குகளுக்கு 10%ம், முதலீட்டாளர்களின் மதிப்பைக் கணக்கிடும் போது தள்ளுபடி விகிதம் பொருந்தும் என்றும் சந்தை நிலவரங்கள் மாறும்போது அவை திருத்தப்படலாம் என்றும் ADDX தெரிவித்துள்ளது.

 

அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களாகத் தகுதிபெற, தனிநபர்களின் தனிப்பட்ட சொத்துமதிப்பு, கிரிப்டோ சொத்துகளைச் சேர்த்த பிறகு S$2 மில்லியன் வரம்பிற்குல் இருக்கும்படி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

 

CoinDeskன் புள்ளிவிவரப்படி, 07.06.2022அன்று கிரிப்டோ நாணயங்களின் சந்தை மூலதனம்

1. Bitcoin – US$ 563 பில்லியன்
2. Ether – US$209 பில்லியன்
3. USD coin – US$45 பில்லியன்

 

இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்ட-முதலீட்டாளர் அந்தஸ்துக்குத் தகுதிபெறவும், தனியார் சந்தைகளில் அதிநவீன முதலீட்டு வாய்ப்புகளில் பங்கேற்கவும் அதிக தனிநபர்களுக்கு வழி செய்கிறது.