வரி சலுகை இருக்கு! சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகள் எவ்வளோ தங்கத்தை எடுத்து வரலாம்? ஆனாலும் ஒரு சிக்கல்!

Photo: Tamil Goods Return

திருமணங்களில் பரிசாக அளிக்கப்படும் தங்க நகைகள் முதல், தங்கக் காசுகளில் முதலீடு செய்வது வரை, இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் கொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், அவசரநிலை ஏற்படும் போது அதை பணமாக மாற்றலாம்.  குறிப்பாக வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள், தங்கத்தின் குறைந்த விலை மற்றும் உயர்ந்த தரம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள்.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் சுங்க வரி ஆகியவை இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்துச் செல்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கத்தை எடுத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில உள்ளன.

இந்தியாவிற்கு தங்கம் கொண்டு செல்வது சட்டப்பூர்வமானதா?

ஒரு இந்திய நாட்டவர் தங்க நகைகளை சட்டப்பூர்வமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்லலாம். அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் செலுத்த வேண்டிய சுங்க வரி ஆகியவை அவரது குடியுரிமை நிலை மற்றும் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தைப் பொறுத்தது மாறுபடும்.

சுங்க வரி செலுத்தாமல் எவ்வளவு தங்கத்தை நான் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்?

ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பயணி ஒருவர் கீழ் கண்ட அளவிற்கு எடுத்து வர முடியும்.

20 கிராம் – அதிகபட்ச மதிப்பு ரூ. 50,000/- (ஆண் பயணிகள்)
40 கிராம் –  அதிகபட்ச மதிப்பு ரூ. 100,000/- (பெண் பயணிகள்)

ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய சந்தை விலை ரூ4,500/கிராமுக்கு அதிகமாக இருப்பதால், நீங்கள் 20/40 கிராம் எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே வரம்பு ரூ 50,000/ரூ 100,000 ஆக இருக்கும்.

குழந்தைகளுக்கும் பொருந்துமா?

ஆம், தங்க நகைகள் மீதான வரியில்லா கொடுப்பனவு, 1 வருடம் அல்லது அதற்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

வரி இல்லாமல் தங்க நாணயம், தங்க பிஸ்கட் அல்லது தங்கக் கட்டியைக் கொண்டு வர முடியுமா?

இல்லை. சலுகைகள் தங்க நகைகளுக்கு மட்டுமே. வேறு எந்த வடிவத்திலும் தங்கம் கொண்டு வந்தாலும் வரி செலுத்த வேண்டும்.

அதிகப்படியான தங்க நகைகளுக்கு சுங்க வரி எவ்வளவு?

ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 13.75% தள்ளுபடி வரி செலுத்த வேண்டும்.