“முடிவில்லா நோய்” வகையில் கோவிட்-19 ஐ சேர்த்த நாடு – பயணிகளுக்கு நீக்கப்படவுள்ள சோதனை தேவைகள்!

கோவிட் -19 தொற்றுநோயை Endemic என்னும் “முடிவில்லா நோய்” வகையில் தாய்லாந்து அறிவித்துள்ளதாக பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 1 முதல் Endemic நிலை நடப்புக்கு வரும் என கூறியுள்ளது பாங்காக் போஸ்ட்.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்

நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் “அதிக ஆபத்து” என்று கருதப்படும் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பயணிகளுக்கான சோதனைத் தேவைகளையும் நீக்குகிறது தாய்லாந்து.

இருப்பினும், உள்நாட்டில் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் கூறினார்.

கோவிட்-19 Endemic நிலையை நான்கு நிலைகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ART சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தி நேஷன் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு