சிங்கப்பூரில் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிக்க வழி இருக்கா? கஷ்டப்பட்டு வாங்கியதை இப்படி அம்போன்னு விட்டுபோகாதீங்க!

Foreigners can soon renew driving licences online

உலகில் உள்ள பல நாடுகளைப் போலவே, சிங்கப்பூரில் ஒரு நபர் சாலையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சரியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் அனைத்து போக்குவரத்து விதிகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.

சிங்கப்பூரில் மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கும் தகுதியான ஓட்டுநர் உரிமம் (QDL) பெறுவதற்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். ஒரு வருட தகுதிகாண் காலத்துக்குள் 13 டிமெரிட் புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஆம்னிபஸ், சுமை அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கட்டப்பட்ட 2500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள கனரக மோட்டார் வாகனங்கள், 7250 கிலோவுக்கு மேல் எடை கொண்ட கனரக வாகனங்களை ஓட்ட 21 வயதை கடந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்தின் வகைகள்

தற்காலிக ஓட்டுநர் உரிமம் (PDL) – சிங்கப்பூரில் நிறுவப்பட்ட எந்த ஓட்டுநர் பள்ளியிலும் எடுக்கப்படும் அடிப்படைக் கோட்பாடு தேர்வில் (BTT) தேர்ச்சி பெற்ற பின்னரே PDL விண்ணப்பிக்க முடியும். எந்தவொரு நபரும் பொதுச் சாலைகளில் ஓட்டக் கற்றுக்கொள்வதற்கும் மோட்டார் காரை இயக்குவதற்கும் முன் PDL தேவைப்படுகிறது.

தகுதியான ஓட்டுநர் உரிமம் (QDL)- நடைமுறை ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். உரிமம் வைத்திருப்பவர் 1 ஆண்டு தகுதிகாண் காலத்துக்கு உட்படுவார். உரிமம் வைத்திருப்பவர் தகுதிகாண் ஆண்டுக்குள் 12 டிமெரிட் புள்ளிகளுக்கு மேல் குவித்தால் , உரிமம் ரத்து செய்யப்படும். தகுதிகாண் உரிமத் தகடுகளைக் காட்டத் தவறினால், குற்றமிழைத்த ஓட்டுநருக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படலாம், பின்னர் அடுத்த முறை உடனடியாக ரத்து செய்யப்படும்.

இப்படி பல நிலைகளை கடந்தே சிங்கப்பூர் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும். எனது நண்பர் இந்தியாவில் உள்ளார். அவருடைய சிங்கப்பூர் வாகனம் ஓட்டும் உரிமம் காலாவதி ஆகிவிட்டது. அவர் ஏற்கனவே இங்கு ஓட்டுனராக பணிப்புரிந்தவர். என்ன செய்யலாம் என்று பார்த்தால், அவர் வாய்ப்பை தவறவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் காலாவதியாகி மூன்று வருடத்திற்குள் புதிப்பிக்க வேண்டும். அப்படி தவறிவிட்டால், மீண்டும் முதலில் இருந்து வாகனத்தை இயக்கிக்காட்டி தேர்ச்சி பெற வேண்டும். இந்த சிரமம் எதற்கு?