சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள பணவீக்கம் – இனி விலைவாசி உயர்வை எதிர்கொள்ள வேண்டும்

சிங்கப்பூரில் வங்கி கணக்கு
Photo: Getty

சிங்கப்பூரில் உணவு பொருட்கள், பொது மற்றும் தனியார் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் பின்னணியில் கடந்த மாதம் விலைவாசி அதிகரித்தது.கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள பணவீக்கத்தால் நுகர்வோர் விலைகள் அதிகரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

திங்கள் கிழமை (April 25) விலைவாசி உயர்வு குறித்த தரவுகள் வெளியிடப்பட்டது.
தங்குமிடம் மற்றும் தனியார் போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இது 2012ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குப் பிறகு காணப்பட்ட அதிகபட்ச விகிதமாகும். மேலும் Bloomberg நடத்திய கருத்துக் கணிப்பில் 2.5% உயர்ந்து பொருளாதார வல்லுனர்களின் முன்னறிவிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திங்களன்று சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) , வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ,வெளிப்புற பணவீக்க அழுத்தங்கள் குறைவதால் இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதாரம் மிதமான நிலைக்கு வருவதற்கு முன், எதிர்வரும் மாதங்களில் முக்கிய பணவீக்கம் (Core Inflation) மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மாதாந்திர அடிப்படையில் முக்கிய பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.7% அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் அதிகரித்ததால் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைகள் 1.2% அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் ,சிங்கப்பூரின் மத்திய வங்கி பண வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட விநியோக சங்கிலி ஆகியவற்றை மேற்கோள்காட்டி MAS 2022-ஆம் ஆண்டிற்கான பணவீக்க கணிப்புகளை உயர்த்தியுள்ளது.