“சிங்கப்பூர் டாலர்” உள்ளிட்ட ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட இருந்த பயணி ஒருவரிடம் இருந்து சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்ல தயாராக இருந்த பயணியிடம் அவை சிக்கின. வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!

அப்போது திருச்சியை சேர்ந்த 48 வயது பயணி ஒருவரின் கைப்பையில் இருந்து ரூ.66 லட்சம் மதிப்பிலான சிங்கப்பூர் டாலர், அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கிட் உட்பட வெளிநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தினை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக அந்த பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!