“வெள்ளிக்கிழமை வந்துருவோம் ” – சிங்கப்பூரை நோக்கி துறைமுகம் வழியாக வரும் 50,000 கிலோ கோழிகள்

chicken halt in malaysia singapore poultry sellers

சிங்கபூருக்கு கோழி இறைச்சியை இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடு மலேசியா ஆகும்.சென்ற ஜூன் மாதம் அதற்கு தடை விதித்தால் உள்ளூர் விநியோகம் பாதிக்கப்பட்டது.எனவே,மற்ற நாடுகளிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தோனேசியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய கடந்த ஜூன் மாத இறுதியில் சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி அளித்தது.தற்பொழுது,உறைந்த கோழிகளை இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 50,000 கிலோ கோழி இறைச்சி புதன்கிழமை மாலை CBI கோழிப்பண்ணையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூப்பியா மதிப்புள்ள இறைச்சிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.வெள்ளிக்கிழமை கோழி இறைச்சி சிங்கப்பூர் வந்து சேரும் என்று எதிர்பர்ர்க்கப்படுகிறது.

இந்தாண்டு முழுவதும் CBI நிறுவனம் மட்டும் சிங்கப்பூருக்கு சுமார் 40 பில்லியன் ரூப்பியா மதிப்புள்ள ஆயிரம் டன் கோழி இறைச்சியை விநியோகிக்க உள்ளது.

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஏற்றுமதி இந்தோனேசிய கோழிப்பண்ணைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புவதாக நிறுவனத்தின் தலைவர் கூறினார்.சிங்கப்பூர் மட்டுமின்றி ஜப்பான்,கத்தார்,பாப்புவா நியூகினி ஆகிய நாடுகளுக்கும் இந்நிறுவனம் கோழிகளை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.