குறைந்த விலையில் உறைந்த கோழி ! – மலேசியாவில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுகிறதாம் !

frozen-chicken-malaysia-import

கடந்த ஜூன் மாதம் கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடையை அறிவித்ததால் சிங்கப்பூரில் கோழி விநியோகம் பாதிப்படைந்தது.எனவே,சிங்கப்பூர் கோழி இறைச்சிக்கு இந்தோனேசியாவை நாடியது.தற்போது,மலேசியா உறைந்த கோழியை இறக்குமதி செய்யப் போவதாக மலேசிய தொழில்முனைவோரும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான நோ ஓமர் அறிவித்தார்.

மலேசியாவில் உறைந்த கோழி “குறைந்த விலையில்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் போதுமான கோழி சப்ளை இருப்பதை உறுதி செய்வதற்காக உறைந்த கோழியை இறக்குமதி செய்ய உள்ளதாகக் கூறினார்.கோழியின் விலைகள் மலிவு விலையில் இல்லை. இந்த முயற்சி செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நோ ஓமர் கூறினார்.

உறைந்த கோழிகளை இறக்குமதி செய்யும் மலேசியா ,அவற்றை அமைச்சகத்தின் கூட்டுறவுச் சந்தைகள் அல்லது கூப்மார்ட் மூலம் விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு உறுப்பினர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டவும் மலேசிய குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையைத் தணிக்கவும் மலேசியா முழுவதும் நூற்றுக்கணக்கான கூட்டுறவு கடைகள் அல்லது கூப்மார்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

உறைந்த கோழியைத் தவிர, சர்க்கரை, சமையல் எண்ணெய், மாவு மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நாடு முழுவதும் உள்ள கூப்மார்ட் விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் விற்கப்படும் என்று நோஹ் கூறினார்.உறைந்த கோழி விநியோகத்திற்காக பல நாடுகளை அடையாளம் கண்டுள்ளதாக ஜூலை 22 அன்று செய்தியாளர்களிடம் கூறினார்