விளையாட்டு பொருளில் கம்பியாக மாற்றி கொண்டு வரப்பட்ட தங்கம் – சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்

வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமான பயணிகளை வழக்கம் போல அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, விமான நிலைய சுங்க இலாகா உயர் அதிகாரி உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில், பயணிகளை அதிகாரிகள் கடுமையாக சோதனை செய்தனர்.

தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH

அதனை அடுத்து, துபாய் பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார்.

அவரின் உடமைகளின் குழந்தை விளையாட்டு இசை கருவி ஒன்று இருந்தது, அதை சோதனை செய்து பார்த்ததில் தங்கத்தை கம்பிகளாக மறைத்து கடத்தி வந்ததை கண்டறியப்பட்டது.

அதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் என்றும், மொத்தம் 110 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர்… வெளிநாட்டுக்குத் தப்பி, திருச்சி வந்தபோது கைது!