முதலிடம் பிடித்த கூகுள் -சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது ஆண்டாக முதலிடம்

google got first place in singapore statista survey

சிங்கப்பூரில் சிறந்த வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. திறமைக்கான போட்டியில் மிக கடுமையாக இருக்கும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்த முதல் அரசு நிறுவனம் பொருளாதார மேம்பாட்டு வாரியம் ஆகும். இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திங்கள் கிழமை அன்று (April 18) The Straits Times மற்றும் உலகளாவிய புள்ளியியல் நிறுவனமான Statista ,சிங்கப்பூரின் சிறந்த வேலை வழங்குபவர்கள் 2022 குறைந்தபட்சம் 200 பணியாளர்களைக் கொண்ட முதல் 200 நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டன.

The Lego Group, தொழில்நுட்ப நிறுவனமான Apple, மற்றும் ஃபின்டெக் நிறுவனமான Wise ஆகிய நிறுவனங்கள் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. சென்ற வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் எடுக்கப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்பின் முடிவு இந்த தரவரிசை ஆகும். இந்த ஆன்லைன் கணக்கெடுப்பு 17000க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கியதாகும்.

” இந்த ஆண்டு பட்டியலில் இடம் பிடித்துள்ள 70% நிறுவனங்கள் சென்ற வருட பட்டியலை போல அமைந்துள்ளன. தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள 200 நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை செய்துள்ளன. குறிப்பாக இந்த நெருக்கடியான நேரத்தில் ” என்று Statista ஆய்வாளர்கள் Wu Ruoh Yiang மற்றும் Taylor Benedict ஆகியோர் கூறினர்.நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் திருப்தி முந்தைய வருடத்தைவிட மேம்பட்டு உள்ளதாகவும் கூறினர்