தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் HDB மறுவிற்பனை பிளாட்களுக்கான விலைகள்

HDB Flat

99.co மற்றும் SRX அறிக்கையின்படி, HDB மறுவிற்பனை சந்தை மே 2022 இல், தொடர்ந்து 23வது மாதமாக விலை உயர்ந்து, மே மாதத்தில் மட்டும் 0.5 % உயர்ந்து 2,156 மறுவிற்பனை குடியிருப்புகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மறுவிற்பனை அளவு 5.1 % குறைந்துள்ளது, இதனால் தேவை தொடர்ந்து விநியோகத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

மே 2021 உடன் ஒப்பிடும்போது, HDB மறுவிற்பனை பிளாட்களின் விலையில் 11 % உயர்வு காணப்பட்டுள்ளது

நான்கு அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஆண்டிற்கு 11.9 % உயர்ந்துள்ளது , எக்சிகியூட்டிவ் மற்றும் மூன்று அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 11.5 % உயர்ந்துள்ளது.

ஜூன் 6 வரை தொகுக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சராசரி மறுவிற்பனை விலைகள்

மிக அதிகம் :-

1. புக்கிட் திமா எஸ்டேட் (S$840,000)

2. பிஷான் எஸ்டேட் (S$738,000)

3. மற்றும் குயின்ஸ்டவுன் (S$706,000)

மிக குறைவு :-

1. ஆங் மோ கியோ (S$430,000)

2. பெடோக் (S$442,500)

3. Yishun (S$450,000)

Pasir Ris மற்றும் Woodlandsல் உள்ள மூன்று எக்சிகியூட்டிவ் HDB மறுவிற்பனை பிளாட்கள் மே 2022 இல் ஒரு மில்லியன் டாலர்களுக்கு முதல் முறையாக விற்கப்பட்டன. முன்னதாக மே மாதத்தில், ஹென்டர்சனில் ஐந்து அறைகள் கொண்ட HDB மறுவிற்பனை பிளாட் S$1.4 மில்லியனுக்கு விற்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.