சிங்கப்பூரில் ஒரே வீட்டில், வேறு வேறு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் வாடகைக்கு இருக்கலாமா?

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் வாடகை மிகவும் அதிகம், 2 படுக்கை அரை கொண்ட வீடு சுமார் 1800 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் வரும். இந்திய ருபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட 1 லட்சம். இந்த பகிர்ந்து கொள்ளும் வசதி மட்டும் இல்லை என்றால் இங்கு வந்து சேமிப்பு பார்ப்பது முடியாது. அதே போல் எல்லார்க்கும் தனி வீடுலாம் இங்க கிடைக்காது.

சிங்கப்பூரில் தொழில்நுட்ப வல்லுநர்கள், மெக்கானிக்குகள், மேலாண்மை நிபுணர்கள் முதலான மூளை உழைப்பாளர்கள் ஓரளவு சம்பாதிக்கலாம். எனக்கு தெரிந்த தகவல் தொழி்நுட்ப நண்பர்கள் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து கொண்டு, ஒரு அறையை மற்றொரு தம்பதியினருடன் பகிர்ந்து கொண்டு பணி செய்தார்கள்.

வீட்டு உரிமையாளருக்கு ஒரு சிறு வருமானம் கிடைக்கவும் வீட்டு தட்டுபாட்டை போக்கவும் அரசாங்கமே உள் வாடகை கொடுக்கும் வழக்கத்தை அனுமதித்தது. இரண்டு பெட் ரூம் வீட்டில் ஒரு பெட் ரூம் தவிர்த்து மற்ற எல்லா வசதிகளையும் உபயோக படுத்தி கொள்ள முடிந்தது.புரோக்கர் மூலம் அக்ரிமென்ட் மற்றும் அட்வான்ஸ் செய்து கம்பெனியே எடுத்துக் கொடுத்தது. உரிமையாளரும் தமிழரே. ஆனால் குறைந்த காலத்துக்குத்தான் (3–6 மாதங்கள்) இந்த முறை சரியாக வரும்.

இது தமிழ் நாட்டிலும் காலம் காலமாக இருந்து வரும் ஒண்டுக் குடித்தனம் போன்றதுதான். பாலச்சந்தரின் “எதிர்நீச்சல்” மற்றும் சிவாஜியின் “பாரதவிலாஸ்” போன்ற படங்களிலும் இந்தமாதிரி ஒரே வீட்டை பல குடும்பங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒண்டுக் குடித்தனம் காட்டப் பட்டிருக்கும்.