சிங்கப்பூரில் இந்திய சிம்கார்டை பயன்படுத்த முடியுமா? இங்கே வந்ததும் தனி சிம் வாங்குவதன் பின்னணி!

(Photo : ABC)

சர்வதேச ரோமிங் வசதி ஆக்டிவ் செய்து இருந்தால் பயன்படுத்தலாம், அதற்கு கட்டணங்கள் மிகவும் அதிகம் . இன்கமிங் அழைப்புக்கே கட்டணம் செலுத்த வேண்டும். தப்பி தவறி கூட டேட்டா பயனபடுத்த கூடாது பில் எகிறிவிடும்.

முடிந்த வரை எங்கு சென்றாலும் லோக்கல் சிம் வாங்கி கொள்ளுங்கள், ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட் காண்பித்து வாங்கலாம், குறுகிய காலம் எனில் ஃஒபை வசதி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நெட்வொர்க் ஆபரேட்டர்களும் பிற நாட்டு ஆபரேட்டர் நெட்வொர்க்கை பயன்படுத்த ஒப்பந்தம் செய்து வைத்திருப்பார்கள் அதன் மூலம் நமக்கு சிக்னல் கிடைக்கும்.நமது கைபேசி ஸ்கிரினில் கூட ரோமிங் நேட்வோர்கை காணலாம்.

ஏர்டெல் நெட்வொர்க் மலேசியா, ப்ரூனே, குவைத் ஆகிய மூன்று நாடுகளிலும் எந்த வித தடையின்றி அவர்கள் டை அப் செய்துள்ள நெட் வொர்க் உடன் கனெக்ட் ஆகிறது. மலேசியாவில் Digi, ப்ரூனேயில் DST, குவைத்தில் Zain என்ற நெட்வொர்க்கில் இணைகிறது.

மினிமம் பேலன்ஸ்இருந்தால் இன்கமிங் கால் வரும். குறைந்தால் அழைப்புகள் வருவதில்லை. வங்கிக்கான OTP வருவதால் மாதா மாதம் ரீசார்ஜ் செய்து கொண்டு ஆக்டிவில் வைத்திருக்க வேண்டும்.

இந்த மூன்று நாட்டிலும் பயன்படுத்திய நெட்வொர்க்குகள் நம்மூரில் வந்தாலும் கனெக்ட் ஆகும். மினிமம் பேலன்ஸ் வைத்திருந்தால் இன்கமிங் இருக்கும்.

மலேசியாவின் செல்காம் – ஏர்டெல் அல்லது வோடஃபோன், ப்ருனேயின் டிஎஸ்டி – ஏர்டெல், ப்ருனேயின் ப்ரோக்ரசிவ் – ஏர்டெல் / ஐடியா ஆகியவை இந்த பட்டியலில் வரும்.

குவைத்-ன் செய்ன் போஸ்ட்பெய்ட், இண்டர்நேஷனல் ரோமிங் ஆக்டிவில் இல்லாததால் கனெக்ட் ஆவதில்லை.