இந்திய சர்வதேச பயணிகள் விமான சேவை: இந்த மாதத்திலாவது தொடங்குமா? – எதிர்நோக்கும் ஊழியர்கள்

Singapore Flights

இந்தியாவில் கொரோனா காரணமாக இருந்து தடை செய்யப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தம் மேலும் தொடரும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) அறிவித்துள்ளது.

கொரோனா புதிய வகை பரவலின் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்தது. அதன் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்து கடந்த நவம்பர் மாத இறுதியில் தடை செய்யப்பட்டது.

“ஊழியர்களை இதற்காக தொந்தரவு செய்யக்கூடாது!”… மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் MOM

இந்நிலையில், இந்த பயணிகள் விமான சேவையானது மறு அறிவிப்பு வெளியாகும்வரை தொடர்ந்து நிறுத்தப்படுவதாக DGCA தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த தடை காலத்தில் சிறப்பு விமானங்கள், சர்வதேச சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள், பயணிகள் விமான சேவை எப்போது மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!