சிங்கப்பூரில் இந்தியாவின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? – சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் CEO விளக்கம்

economy-premium-economy-class-passengers wi-fi
(PHOTO: Reuters)

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றது. சர்வதேச நாடுகளுக்கிடையேயான பன்னாட்டு விமான போக்குவரத்து Covid-19 பரவலின் காரணமாக தடை செய்யப்பட்டிருந்ததால் உள்நாட்டில் நிதி அபாயங்கள் தலைதூக்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளிநாட்டு மையங்களை எதிர்நோக்குகிறது.

Covid-19 தொற்று பரவலினால் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தை முடங்கியதால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலுக்கு பிறகு ,சர்வதேச கூட்டாளர்கள் உடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மற்றும் வெளிநாட்டு மையங்களை இயக்குவது போன்ற நடவடிக்கையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி Goh ,விமான நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புகளுக்குரிய வாய்ப்புகள் திறந்துள்ளதாகவும் ,சாத்தியமான கூட்டாளர் நிறுவனங்களை, சிங்கப்பூர் விமான நிறுவனம் மதிப்பீடு செய்யும் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வைரஸ் பரவலுக்கு முன்பு 2 மில்லியன் பயணிகளுடன் பறந்த விமான நிறுவனங்களை ஒப்பிடும்போது வைரஸ் தொற்று பரவலுக்கு பின்பு சில ஆயிரம் பயணிகளுடன் மட்டுமே பறக்கின்றன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு இந்த நேரத்தில் வருடாந்திர இழப்பை அறிவித்தது. நிதிப் பிரச்சனைகள் எப்போது மேம்படும் என்று தெரியவில்லை ,ஆனால் நெருக்கடியை சமாளிக்க விமான நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர்களை திரட்ட வேண்டி இருந்தது என்று கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளும் சிங்கப்பூரும் தனிமைப்படுத்தப்படாத சர்வதேச பயணங்களுக்கு மீண்டும் எல்லைகளைத் திறந்துள்ளன.தொற்று நோய்க்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை கொண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பறந்து சென்றது .

விமான போக்குவரத்தில் இந்தியாவின் வளர்ச்சி பகுதி என்று Goh உயர்த்திக் கூறினார். மேலும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய விமான சந்தையாக மாறும் என்று தெரிவித்தார் .