கேம் மோகத்தால் ரூ.36 லட்சத்தை இழந்த இந்தியர்… சிங்கப்பூர் கேமிங் போர்ட்டலில் பதிவிறக்கம் செய்து பணத்தை இழந்த சோகம்!

indian loses money game

சிங்கப்பூர் கேமிங் போர்ட்டலில் இருந்து கேம் ஒன்றை பதிவிறக்கம் செய்த ஓய்வுபெற்ற இந்திய நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் மகன், அதிகமான கேம் அம்சங்களைப் பெற சுமார் ரூ.36 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அவரின் மகன், கேம்க்கு அடிமையாகி, அதற்கான அதிக அம்சம் பெற வேண்டும் என்ற புத்தியில் இதனை செய்ய, அவரது தந்தையில் வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

இதுபற்றி ஆக்ரா சைபர் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், போலீஸ் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனது தந்தையின் செல்போனில் விளையாடிய சிறுவன் ‘Battle Ground Game’ என்ற கேமை பதிவிறக்கம் செய்து, மொபைல் UPI மூலம் பணம் செலுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

விளையாட்டில் மூழ்கிய சிறுவன், அந்த கேமில் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்ற நோக்கில் அதிக நவீன ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று இவ்வாறு செய்துள்ளது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இழந்த பணத்தை பெற முயற்சித்து வருவதாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் திடீரென எகிறிய தொற்று பாதிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கிறதா.? – மருத்துவர்கள் விளக்கம்!