“அனைத்து வங்கிகளுக்கும் உடனடியாக பணம் அனுப்பும் சேவை”- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

File Photo

இந்தியாவைச் சேர்ந்த வங்கியும், இந்திய அரசின் பொதுத்துறை வங்கியுமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) 1937- ஆம் ஆண்டு பிப்ரவரி 10- ஆம் தேதி அன்று சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டது. வங்கித் தொடங்கப்பட்டு 84 வருடங்கள் ஆகும் நிலையில், சிறப்பாகவும், லாபகரமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. சிறந்த வங்கி சேவையை வழங்கி வருவதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளேன் என்று கூறுகிறார் வாடிக்கையாளர் ஒருவர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நான்கு வெளிநாடுகளில் தனது வங்கியின் கிளைகளைத் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையை அளித்து வருகிறது.

விரைவுச் சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து!

அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிங்கப்பூரில் தனது வங்கியின் இரண்டு கிளைகளை அமைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழிலாளர்கள் பலரும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மேலும், பணத்தை டெபாசிட் செய்தல், இணையதளம் மூலம் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் போன்ற சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 94, சிராங்கூன் சாலையில் இயங்கி வரும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வாரத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய புதிய தானியங்கி பணம் அனுப்பும் இயந்திரம் எங்கள் கிளையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் உடனடியாக பணம் அனுப்ப முடியும். இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது” எனத் தெரிவித்துள்ளது.

“கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை முடுக்கிவிட வேண்டும்”- ஐ.நா.வில் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உரை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.