சிங்கப்பூரில் எப்போது GST வரி உயர்த்தப்படும்? – அமைச்சர் பதில்

iStock

சிங்கப்பூர் திட்டமிட்ட சரக்கு மற்றும் சேவை வரி (GST) உயர்வை கால வரம்பின்றி தள்ளிப்போட முடியாது என்று 2ஆம் நிதியமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கான சரியான நேரத்தை தீர்மானிக்க ஒட்டுமொத்த பொருளாதார சூழலை அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி சாமர்த்தியமாக கடத்தி வந்த தங்கத்தை கண்டறிந்த அதிகாரிகள்!

GSTயை 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தும் திட்டம், 2018ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீயட்டின் பட்ஜெட் உரையின் போது முதலில் அறிவிக்கப்பட்டது.

அப்போது, ​​2021 முதல் 2025 வரை இந்த GST உயர்வு எப்போது வேண்டும் என்றாலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். பொருளாதாரத்தின் மீது COVID-19 ஏற்படுத்திய தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு GST உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பணவீக்க அழுத்தத்தை தவிர்ப்பதற்காக GST உயர்வை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹ்வா (PAP-Bukit Panjang) கேள்வி எழுப்பியிருந்தார்.

தனது பதிலில் திருமதி இந்திராணி கூறியதாவது; தனது கேள்விக்கு இரண்டு அம்சங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

GST உயர்வு தேதியை தாமதப்படுத்துவது மற்றும் அந்த அதிகரிப்பினால் சிங்கப்பூரர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை அரசாங்கம் தாமதப்படுத்த முடியுமா? ஆகியவை அந்த அம்சங்கள் ஆகும்.

சிங்கப்பூரர்களுக்கு GST அதிகரிப்பின் தாக்கம் மற்றும் அதைத் தாமதப்படுத்த முடியுமா என்பது பற்றி திருமதி இந்திராணி கூறினார்.

GST அதிகரிப்பு எப்போது நடைமுறைக்கு வந்தாலும் அதன் தாக்கத்தை, நடைமுறைக்கு வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே சிங்கப்பூரர்கள் உணரப்படும் வகையில் அரசாங்கம் அம்சங்களை வடிவமைத்துள்ளது, என்றார்.

பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!