“சிங்கப்பூரில் சிறுநீர் கழிக்கணும்னா கூட யோசிக்கணும்” – கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வினோத சட்டங்கள்!

File Photo : Singapore Police

சிங்கப்பூர் சுத்தத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது . சிங்கப்பூர் அரசாங்கம் நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினமாக அறிவிக்க ஐ.நா தீர்மானத்தை தாக்கல் செய்தது.

இது 122 நாடுகளின் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் நவம்பர் 19, 2001 அன்று உலக கழிப்பறை அமைப்பு உருவாக்கப்பட்டது. சுத்தம் கடைபிடிக்க வேண்டுமென சிங்கப்பூரில் சில வினோத சட்டங்களும் உண்டு.

சிங்கப்பூரில் போலீஸைக் கண்டால் மெல்லுவதை நிறுத்துங்கள். ஏனென்றால் சுயிங்கம் மெல்லுவது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது. சுயிங்கம் வைத்திருப்பது சட்டவிரோதமானது. சிங்கப்பூரில் பிரம்பு அடிப்பது என்பது சட்டப்பூர்வ தண்டனை முறையாகும்.

கார் உரிமையாளர்கள் தங்கள் காரின் சான்றிதழைப் பெற கார் விலையை விட 1.5 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும். சிங்கப்பூரில் கட்டிடங்களின் உயரத்திற்கு வரம்பு உள்ளது. உச்ச அளவு 280 மீ. சிங்கப்பூரில் சரியாக 280 மீ நீளமுள்ள மூன்று கட்டிடங்கள் உள்ளன.

நீங்கள் சிங்கப்பூரில் ஆணாகப் பிறந்திருந்தால், நீங்கள் 18 வயதை அடைந்தவுடன் பெரிய துப்பாக்கிகளைக் கையாள வேண்டும். சிங்கப்பூரில் 1-2 ஆண்டுகள் கட்டாய இராணுவச் சேர்க்கை உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள லிஃப்ட்களில் சிறுநீர் கண்டறிதல் சாதனம் உள்ளது. மேலும் சிறுநீர் கழிப்பது கண்டறியப்பட்டால், போலீஸ் வரும் வரை லிப்ட் கதவு பூட்டப்பட்டிருக்கும். சிங்கப்பூர் அரசு லிஃப்டில் சிறுநீர் கழிப்பதைத் தடைசெய்யும் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை இயற்றியுள்ளது.

பொது கழிவறையை பயன்படுத்திவிட்டு அதனை முறையாக தண்ணீர் ஊற்றி பிளஸ் செய்யா விட்டாலும், சிங்கப்பூரில் அது சட்டப்படி குற்றமாகும்.