ரஷ்யாவின் படையெடுப்பினால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு மத்தியில் சிங்கப்பூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் லீ பேச்சு

amid russia war singapore economy should to be strengthen pm lee

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் உலக வர்த்தக மற்றும் வாழ்க்கை செலவுகள் பாதிப்படைவதால் ,சிங்கப்பூரின் பொருளாதாரம் வலிமையாகவும் மற்றும் நெகிழ்ச்சியுடனும் இருக்க சிங்கப்பூரின் பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ (May 1) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரக்கமற்ற தாக்குதல் உலக நாடுகளின் மதிப்பை குறை மதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.இது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு மோசமானதாக அமைகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இருப்பு, சர்வதேச சட்டத்தின் ஆட்சியை பொருத்து அமைகிறது என்று பிரதமர் லீ மே தின விழா பேரணியில் கூறினார்.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 1.5 சதவீதம் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அதாவது சிங்கப்பூரில் நாம் ஒரு ஆண்டுக்கு $8 பில்லியன் டாலர்கள் ஏழைகளாகிவிட்டோம் .நாம் இதிலிருந்து தப்பிக்க முடியாது ” என்று கூறினார்.

தானே உற்பத்தி செய்யும் சூரிய மின் சக்தியை தவிர அனைத்து எரிசக்தி பொருளையும் சிங்கப்பூர் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக எண்ணெய்விலை பீப்பாய் ஒன்றுக்கு US$ 50 டாலராக இருந்த போது சிங்கப்பூர் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் வருடாந்திர இறக்குமதிகள் ஆண்டு ஒன்றுக்கு $30 பில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால் கடந்த 16 மாதங்களில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு US$100 டாலராக இரட்டிப்பாகும் போது சிங்கப்பூரும் இரண்டு மடங்கு செலுத்த வேண்டியுள்ளது. அதாவது ஆண்டு ஒன்றுக்கு 30 பில்லியன் டாலர்கள் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறினார்.