JCube மால் விரைவில் மூடப்பட உள்ளது – காரணம் என்ன..?

JCube closing soon
CapitaLand Development

JCube மால் தனது வர்த்தக செயல்பாடுகளை வரும் ஆகஸ்ட் 7, 2023 முதல் நிறுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக வரும் ஆக., 6ம் தேதி இரவு 10 மணி வரை கடை திறந்திருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கேபிட்டலேண்ட் டெவலப்மென்ட் JCube தளத்தை 40-அடுக்கு குடியிருப்பு கட்டிடமாக மறுவடிவமைப்பு செய்யப்போவதாக இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் வர்த்தக கடைகள் இடம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்பு கட்டிடம் 2027 ஆம் ஆண்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JCube மால் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது, அதாவது பழைய Jurong பொழுதுபோக்கு நிலையம் இருந்த இடத்தில் மால் கட்டப்பட்டது.