சிங்கப்பூரில் ஐந்தாவது உப்பு நீக்கும் சுத்திகரிப்பு ஆலை – சிங்கப்பூரின் தண்ணீரை பாதுகாக்க அனைவரும் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்திய துணைப்பிரதமர்

Jurong Island Desalination

உப்பு தண்ணீரில் இருந்து உப்பினை நீக்கி குடிநீரை பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு ஆலை சிங்கப்பூர் அரசாங்கத்தால் ஞாயிற்றுக்கிழமை (April 17) திறந்து வைக்கப்பட்டது. இது சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள ஐந்தாவது உப்பு நீக்கும் ஆலை ஆகும். மற்ற ஆலைகளை விட 5% அதிக ஆற்றல் கொண்டது என்று கூறப்படும் இந்த ஆலை ,தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையத்துடன் இணைந்துள்ளது .

Jurong தீவிலுள்ள இந்த ஆலை மின்உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் ,வருடத்திற்கு 5000 மெகாவாட் மணிநேரத்தை சேமிக்க முடியும். அதாவது 1000 வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரிய குடும்பங்களின் வருடாந்திர மின் தேவைக்கு சமமாகும். துணை பிரதமர் Heng Swee Keat மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அமைச்சர் Grace Fu ஞாயிற்றுக்கிழமை ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

3.7 ஹெக்டேர் ஆலை நாளொன்றுக்கு 30 million gallons வரை சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். அதாவது சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர் தேவையில் 7% வரை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய முடியும். சிங்கப்பூர் தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 430 மில்லியன் கேலன் தண்ணீரை உபயோகிக்கிறது. இந்த பயன்பாட்டில் 50% சதவீதத்திற்கும் மேல் தொழில் துறைகள் பயன்படுத்துகிறது.

எதிர்வரும் 2060 ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரில் தண்ணீர் தேவை இருமடங்காக உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வணிகங்கள் அதன் இயக்கச் செலவுகளை குறைத்து ,தண்ணீரைச் சேமிப்பதற்கு வழிவகுக்கலாம் என்றும் தண்ணீரை பாதுகாக்க அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றும் துணை பிரதமர் Heng கேட்டுக்கொண்டுள்ளார்.