சிங்கப்பூரில் KFC-யின் மெனுவிலிருந்து பிரபல பானம் பெப்சி நீக்கம் – போட்டியில் கோக் முந்திச் செல்கிறதா?

KFC outlet in Punggol has licence suspended
chicken
சிங்கப்பூரில் Pizza Hut மற்றும் KFC போன்றவை மிக பிரபலமான துரித உணவகங்கள் ஆகும்.இது போன்ற உணவகங்களில் துரித உணவுகளுக்கு குளிர்பானம் வழங்குவதுண்டு.வழக்கமாக பெப்சி வழங்கப்பட்ட நிலையில் இப்போது துரித உணவுகளுடன் கோக்கை வழங்குகின்றன.இரண்டு நிறுவனத்தின் டெலிவரி இணையதளம் அதன் மெனுவில் இப்போது கோக்கை காண்பிக்கிறது.

KFC, அதன் இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளுக்கு துணையாக பெப்சியை பிரதிபலிக்கிறது.KFC அதன் பான வகைகளை புதுப்பிக்க கோகோ கோலாவுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியது.
வறுத்த கோழியுடன் கோக்கை வழங்க KFC ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில்,கோக் பெரும்பாலான விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்றாலும் எல்லாவற்றிலும் கிடைக்காது என்று KFC-யின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்தார்.
ஜூலை 20, 2022 அன்று முழுமையான மாற்றம் கொண்டுவரப்பட்டது.KFC-யின் இணையதளத்தில் தற்போது இடம்பெற்றுள்ள பெப்சியின் பட்டியல் இந்த வார இறுதிக்குள் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.KFC மற்றும் Pizza Hut ஆகியவற்றிற்கு Yum! என்ற ஒரே தாய் நிறுவனமாகும்.