அதெப்படிங்க! KFC நிறுவனத்துக்கு மட்டும் கோழி இறைச்சி கொள்முதல்ல இடையூறு ஏற்படாம இருக்கு – சிங்கப்பூர் முழுவதும் தடையின்றி 80 கிளைகளை நடத்தும் KFC-இன் திறமை

KFC outlet in Punggol has licence suspended
chicken

கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்கு கோழி ஏற்றுமதித் தடையை மலேசியா விதித்தது.இதனால் சிங்கப்பூரில் கோழி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.கோழிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் சிறுசிறு கோழி விற்பனையகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.ஆனால் பிரபல விரைவு உணவகமான KFC-இன் விநியோகத்திற்கு இடையூறுகள் ஏற்படவில்லை.

சிங்கப்பூர் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட கிளைகளை எந்தவிதத் தடுமாற்றமுமின்றி நடத்தி வருகிறது.உயிருள்ள கோழிகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் மலேசியா தடையை அறிவித்தவுடன் உறைந்த கோழிகளை வழங்கும் ஆஸ்திரேலியா,பிரேசில் போன்ற நாடுகளின் கோழி இறைச்சி விநியோக நிறுவனங்களுக்கு KFC மாறிக்கொண்டதுதான் காரணம்.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுச் சூழலின் பொது நடைமுறையில் இருந்த உணவு பாதுகாப்புத் திட்டத்தை பயன்படுத்த முடிந்ததால் அதிகளவிலான உறைந்த கோழியை கொண்டுவர முடிந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கோழி விநியோகத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதிலிருந்து இந்தோனேசியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது.தற்போது சிங்கப்பூர் விரைவில் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கோழிகள் இறக்குமதி செய்யப்படும்.

குளிரூட்டப்பட,உறையவைக்கப் பட்ட கோழி இறைச்சியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்வதற்கு உரிய நாடாக இந்தோனேசியாவை அங்கீகரித்து இருப்பதாக முகநூலில் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு தேவையான கோழிகளை இப்போது அங்கீகரிக்கப்பட்ட இந்தோனேசிய நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்ய முடியும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும்,தாய்லாந்து,ஆஸ்திரேலியா,பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் இப்போது கோழிகளை வாங்குகிறது.